முசலி பிரதேச சபை தொடர்பான தகவல்கள் விரிவுபடுத்தப்படும்

அரசியலமைப்பில் 14 (a) சரத்திற்கிணங்கவும் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்திற்கிணங்கவும் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்துமுகமாக முசலி பிரதேச சபை தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் அதிகளவில் வெளியிடப்படும்.

சபையில் பொதுமக்கள் கலரியை ஏற்படுத்தல் மற்றும் ஊடகங்களை அனுமதித்தல் என்பவற்றிற்கு பிரதேச சபைச் சட்டம் வலியுறுத்தியுள்ள போதிலும் சில வசதியீனம் கருதி அவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே இப்போதைக்கு மேற்படி குறைபாட்டை நீக்கும் வகையில் சபை நடவடிக்கைகள் மற்றும்  சபைக்கூட்ட அறிக்கைகள் என்பன தொடராக வெளியிடப்படும்.

இதற்கு மேலதிகமாக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பிரதேச சபையின் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்கள் எழுத்து மூலமும் தகவல்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

முசலி பிரதேச சபை வினைத்திறனுடன் செயற்பட பொதுமக்களின் சிறந்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

முகுசீன் றயீசுத்தீன் 
உப தவிசாளர் 
முசலி பிரதேச சபை
முசலி பிரதேச சபை தொடர்பான தகவல்கள் விரிவுபடுத்தப்படும் முசலி பிரதேச சபை தொடர்பான தகவல்கள் விரிவுபடுத்தப்படும் Reviewed by Vanni Express News on 8/04/2018 11:33:00 PM Rating: 5