பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பதவி விலகினார்

உலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து பதவி விலகியுள்ளார். 

பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாகுவார்டா வரும் ஒக்டோபர் மாதம் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். 

கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, அடுத்தாண்டு வரை தலைவர் பொறுப்பில் தொடருவார் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பிறந்த இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13 ஆவது இடத்திலும், 2015 ஆம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2 ஆவது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பதவி விலகினார் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பதவி விலகினார் Reviewed by Vanni Express News on 8/07/2018 04:56:00 PM Rating: 5