வாகனங்களின் விலை குறைக்கப்படும் - அமைச்சர் அஜித் பி. பெரேரா

இலங்கை - சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது ஒரு ஒழுங்குமுறையான அடிப்படையிலேயே என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறுகிறார். 

ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

பாராளுமன்ற விவாதம் முலம் அது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும், நிபுணர்கள் எவரும் உடன்படிக்கையை விமர்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தாமரை மொட்டுக்கு ஆதரவான வைத்தியர்களும் தாமரை மொட்டு அரசியல்வாதிகளுமே விமர்சிப்பதாக அவர் கூறினார். 

எதிர்காலத்தில் வாகனங்களின் விலை குறைக்கப்படும் என்றும், நாட்டின் பணம் வௌிநாடுகளுக்கு சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்காக தற்காலிக தீர்வொன்றுக்கு வருமாறு பிரதமர் நிதியமைச்சருக்கு வழங்கிய ஆலோசனைப்படியே வரி அதிகரிக்ப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வாகனங்களின் விலை குறைக்கப்படும் - அமைச்சர் அஜித் பி. பெரேரா வாகனங்களின் விலை குறைக்கப்படும் - அமைச்சர் அஜித் பி. பெரேரா Reviewed by Vanni Express News on 8/05/2018 11:17:00 PM Rating: 5