சிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்து ஆராய விஷேட நிபுணர்கள் அடங்கிய குழு


சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக விஷேட நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இந்த உடன்படிக்கை சம்பந்தமாக பல்வேறு தரப்பில் இருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பொருளியல் பேராசிரியர் தேசமணி டபிள்யு.டி.லக்ஷமன் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை திறந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிரிமேவன் கொலம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் சம்பந்தமான முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயநேத்தி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ. ஜயதிஸ்ஸ ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்து ஆராய விஷேட நிபுணர்கள் அடங்கிய குழு சிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்து ஆராய விஷேட நிபுணர்கள் அடங்கிய குழு Reviewed by Vanni Express News on 8/11/2018 04:54:00 PM Rating: 5