பல அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஜனாதிபதி தலைமையில் மக்களிடம் கையளிப்பு

புத்தெழுச்சி பெறும் பொலநறுவை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட மேலும் பலஅபிவிருத்தி திட்டங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

அனுராதபுரம் தீபானி மகா வித்தியாலயத்திலும்; ஹபரண மகா வித்தியாலயத்திலும் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்படும்.

அல் ஹிலால்புர ஜூம்மா முஸ்லிம் பள்ளிவாசல், ஹிங்குராக்-தமன காசியப்ப பிரிவெனா ஆகியவற்றின் புனருத்தான பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்படவுள்ளன.

புத்தெழுச்சி பெறும் பொலநறுவை வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு தினங்களில் 120 அபிவிருத்தித்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டன. இவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். 
கிராமபுறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவிடுவதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க உரையாற்றுகையில்,

அரசியல் கட்சிபேதங்களின்றி சகலரும் உதவி செய்தால் நாடென்ற ரீதியில் வெற்றி காண முடியும் என குறிப்பிட்டார். 'புத்தெழுச்சி காணும் பொலன்னறுவை' வேலைத்திட்டத்தின் கீழ் சகல துறைகளையும் உள்ளடக்கியவாறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
பல அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஜனாதிபதி தலைமையில் மக்களிடம் கையளிப்பு பல அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஜனாதிபதி தலைமையில் மக்களிடம் கையளிப்பு Reviewed by Vanni Express News on 8/03/2018 10:49:00 PM Rating: 5