வடக்கில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் - பிரதமர்

வடக்கில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முக்கிய விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுக அபிவிருத்திக்கான திட்டங்களும் இதில் முக்கிய இடம்பெறுதாகவும் தெரிவித்த பிரதமர் இலங்கை பொறியியல் துறையில் பிரவேசித்த தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்தே உருவாகியதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்;பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று திறந்;து வைத்துவைத்து உரையாற்றினார்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்;பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளுக்;காக 500 கோடி ரூபா செலவிடப்பட்டு;ள்ளது.

வடக்கில் பல மனிதாபிமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க சமகால நல்லாடசி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது படையினரிடம் உள்ள காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன 30 வருடகால யுத்தம் வடக்கையும், தெற்கையும் வெகுவாக பாதித்துள்ளது. வியட்நாம் யுத்தத்திற்கு பின்னரே அபிவிருத்தியடைந்தது. அதேபோல் நாம் யுத்தம் நிறைவடைந்தன் பின்னரான இடைகாலத்தில் இருக்கின்றோம் என்றும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
DSC07018 750x430
வடக்கில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் - பிரதமர் வடக்கில் தற்பொழுது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் - பிரதமர் Reviewed by Vanni Express News on 8/05/2018 11:43:00 PM Rating: 5