நல்லாட்சியின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. 

இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.

நுவரெலிய, பூண்டுலோய ட்னசினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 404 வீடுகளை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. மொனறாகலையில் நிர்மாணிக்கப்பட்ட 52 வீடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மக்களுக்காக கையளிக்கப்படவுள்ளன.

குருநாகல் நீர் மற்றும் சுகாதார செயற்றிட்டங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன. காணியில்லாத இரண்டாயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி இரத்தினபுரி நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் நான்காயிரத்து 130 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சியின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு நல்லாட்சியின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு Reviewed by Vanni Express News on 8/11/2018 11:25:00 PM Rating: 5