வாகன இறக்குமதிக்கு வரி அதிகரிப்பில்லை - பிரதமர் ரணில்

1000 சிசி இற்கு குறைந்த வாகன இறக்குமதிக்காக 2018 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் (LC) ஆரம்பிக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு அதிகரிக்கப்பட்ட வரி அமுலாகாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அந்த வாகனங்கள் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குறிய தயாரிப்பு வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.
வாகன இறக்குமதிக்கு வரி அதிகரிப்பில்லை - பிரதமர் ரணில் வாகன இறக்குமதிக்கு வரி அதிகரிப்பில்லை - பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 8/08/2018 04:37:00 PM Rating: 5