குடிநீர் வழங்கல் திட்டம் அமுலாக்கப்படும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

-க.கிஷாந்தன்

நாடாளவீய ரீதியில் காணப்படும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 நீர் வளங்கள் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதில் 5 திட்டங்கள் பதுளை தோட்டப்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

பெருந்தோட்ட மக்களின் நலன் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சர்களான பி.திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் அமைச்சரவைக்கு கூடிய வழியுறுத்தியல்களை வழங்கி வருவதுடன், அத்திட்டங்களை அமுல்ப்படுத்துவதற்கு எம்மையும் தூண்டி விட்டு பெருந்தோட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எங்களையும் பங்களிப்பு செய்ய வைப்பார்கள்.

அந்தவகையில் தேர்தல் காலங்களில் இவர்கள் மலையக மக்களுக்காக வழங்கிய வாக்குறுதிகளை மிக விரைவாக செயல்படுத்தி வருகின்றார்கள். இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும், பகீரங்கமான முறையிலும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.

எனது அமைச்சின் ஊடாக இன்று திறக்கப்பட்டுள்ள புதிய கிராமத்தின் மக்களுக்கு உலக வங்கியின் நிதி உதவியின் ஊடாக சுத்தமான குடிநீர் பெரும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம்.

அதேவேளையில் இந்த அரசாங்கத்தின் அனுசரனையுடன் தோட்டப்புற மக்களுக்கு 30 நீர் வழங்கல் திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும், தெரிவித்த அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் நாடு முழுவதும் உள்ள தோட்டங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளையில் இத்திட்டத்தின் மூலம் பதுளை மாவட்டத்தில் 5 தோட்டப்பகுதிகளில் குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, நுவரெலியாவிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசு அனுசரனையுடன் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு தனி வீடுகள் அடங்கிய கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதற்கு அவ் அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ள அதேவேளை மலையக தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மற்றும் மூஸ்லிம் மக்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றமைக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்த போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக 10 ஆயிரம் வீடுகளை பெருந்தோட்ட மக்களுக்கு மேலதிகமாக வழங்கியுள்ள நிலையில் மேலும் வீட்டு மானியத்தை இம்மக்களுக்கு இந்திய அரசு கொடுத்து உதவ வேண்டும் என இந்திய அரசை வழியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குடிநீர் வழங்கல் திட்டம் அமுலாக்கப்படும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு குடிநீர் வழங்கல் திட்டம் அமுலாக்கப்படும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு Reviewed by Vanni Express News on 8/12/2018 11:29:00 PM Rating: 5