சிகரட்டின் விலை அதிகரிப்பு அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

நேற்று (31) நள்ளிரவு முதல் சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

72 மில்லி மீட்டர் முதல் 84 மில்லி மீட்டர் நீளம் உடைய சிகரட்டுக்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து குறித்த கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் அடிப்படையில் 50 ரூபாவிற்கு விற்கப்பட்ட சிகரட் 55 ரூபாய்க்கும், 55 ரூபாவிற்கு விற்கப்பட்ட சிகரட் 60 ரூபாய்க்கும் இன்று முதல் விற்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சிகரட்டின் விலை அதிகரிப்பு அதிர்ச்சியில் பாவனையாளர்கள் சிகரட்டின் விலை அதிகரிப்பு அதிர்ச்சியில் பாவனையாளர்கள் Reviewed by Vanni Express News on 8/01/2018 03:52:00 PM Rating: 5