வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி 05 மாத கர்ப்பிணி

ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவயது சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரி வந்துள்ளது. 

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 01ம் திகதி ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்ற குறித்த சிறுமி பெலியத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகச சிகிச்சைகளுக்காக தங்காளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அந்த சிறுமி கர்ப்பிணி என்பது தங்காளை ஆதார வைத்தியசாலையில் வைத்து தெரிய வந்துள்ளது. 

இதனைதயடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பெலியத்தை, கரம்பகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் பெலியத்தை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி 05 மாத கர்ப்பிணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  15 வயதுடைய சிறுமி 05 மாத கர்ப்பிணி Reviewed by Vanni Express News on 8/04/2018 04:11:00 PM Rating: 5