கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி ஒருவரை கொலை செய்ததற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இமதுவ, கோதாகொட குருந்துகஹவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

2005ம் ஆண்டு இமதுவ, கோதாகொட பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை Reviewed by Vanni Express News on 8/10/2018 03:36:00 PM Rating: 5