புலமைப் பரிசில் பரீட்சைக்காக சென்ற மாணவியும் தாயும் யானையின் தாக்குதலில் காயம்


மஹியங்கனை, ஹத்தத்தாவ கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவரும் தாயும் இன்று காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து மஹியங்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்காக தாயுடன் சென்று கொண்டிருந்த போதே இருவரும் இவ்வாறு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 

மஹியங்கனை, ஹத்தத்தாவ 80வது ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் சயுரி சத்சரனி என்ற மாணவியும் சேபாலிகா குமாரி (35) என்ற தாயுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். 

இருவரும் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் ஓரத்தில் இருந்த காட்டு யானை திடீரென இவர்களை தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புலமைப் பரிசில் பரீட்சைக்காக சென்ற மாணவியும் தாயும் யானையின் தாக்குதலில் காயம் புலமைப் பரிசில் பரீட்சைக்காக சென்ற மாணவியும் தாயும் யானையின் தாக்குதலில் காயம் Reviewed by Vanni Express News on 8/05/2018 04:24:00 PM Rating: 5