அரசியல் தேவைக்காக மதத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

அரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 

"சசுனட அருண" வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை உதயபுர சிரி சாம விகாரையில் ஸ்தூபத்தை கட்டுவதற்காக அடிக்கல் நட்டும் நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

புத்த சாசனத்தை அழிப்பதாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினர் ஒரு சந்தர்ப்பத்திலாவது தமது சொந்த செலவில் புத்த மத்திற்காக ஏதாவது செய்திருந்தால் அதனை கூறுமாறு அமைச்சர் இதன்போது கூறினார்.
அரசியல் தேவைக்காக மதத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அரசியல் தேவைக்காக மதத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது Reviewed by Vanni Express News on 8/04/2018 05:22:00 PM Rating: 5