தலைப்பை மாற்றிய தலைவர் ஹக்கீம்

-மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

அண்மையில் கண்டியில் SLMC யின் பேராளர் மாநாடு நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து 2 நாளைக்கு போராளிகள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஓய்ந்துபோய்விட்டனர். 

மீண்டும் அதே தலைவர், அதே திட்டம், அதே வேகம், அதே பாடல், மக்களின் கதியும் அதே கதிதான். 

சென்ற 10 வருட காலப்பகுதிக்குள் முஸ்லிம்கள் எல்லாத்துறைகளிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர், எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு ஒரு தலைமை மாற்றம் பற்றி ஆங்காங்கே எல்லா மட்டங்களிலும் பேசப்பட்டு அது தொடர் விவாதமாக மாறியிருந்த நிலையில் மீண்டும் ஒரு பேராளர் மாநாட்டுக்காக மக்கள் எதிர்பார்ப்புடன் கத்துக்கிடந்தனர். 

2018ம் ஆண்டின் பேராளர் மாநாட்டின் புதிய ஒரு தலைவரை தெரிவுசெய்து மாற்று அரசியலை நோக்கி நகர எதிர்பார்த்திருந்த போராளிகளின் நினைப்பில் சபீக் ரஜாப்தீன் என்ற ஒரு நாடக அரங்கேற்றம் தலைப்பையே மாற்றிவிட்டது. இனி இன்னும் 4 வருடங்களுக்கு அதாவது 25 வருடங்களையும் தாண்டி ஆயுல் தலைவராக ரவூப் ஹகீம் என்கின்றவர்தான் இந்த மரக்கட்சி எனும் தனியார் நிருவனத்தை இயக்கப்போகிறார். 

வருடத்தில் ஒருநாள் ஆங்காங்கே சில மரங்க்கன்றுகளை நாட்டி ஒரு போத்தல் தண்ணீர் ஊற்றிவிட்டு காலம் கடத்துகின்ற அரசியல் தலைவர்களை மக்கள் விரும்பவில்லை என்பதுதான் எனது கோரிக்கை. 
தலைப்பை மாற்றிய தலைவர் ஹக்கீம் தலைப்பை மாற்றிய தலைவர் ஹக்கீம் Reviewed by Vanni Express News on 8/10/2018 11:12:00 PM Rating: 5