கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும்

புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக தற்போது நாடு பூராகவும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி மேலதிக பஸ்களை சேவையில் இணைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. 

6000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பஸ் சேவை தேவையேற்படின் 011-7 50 55 55 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். 

இதனால் நேற்று கோட்டை புகையிரத நிலையத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி இருந்தனர். 

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரையில் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தநிலையில் ஒய்வு பெற்ற புகையிரத இயந்திர சாரதிகளை இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் Reviewed by Vanni Express News on 8/09/2018 04:45:00 PM Rating: 5