தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு - ஞானசார தேரர்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக அவரது சட்டத்தணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

ஆகவே அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கு தனக்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார். 

அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் 29ம் திகதி அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஞானசார தேரர் சார்பான சட்டத்தணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

இதனையடுத்து ஞானசார தேரரை வெலிக்கட சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட உத்தரவுக்கு அன்றைய தினம் வரை தடை விதித்து உத்தரவிடுமாறு ஞானசார தேரர் சார்பான சட்டத்தணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். 

எனினும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு - ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு - ஞானசார தேரர் Reviewed by Vanni Express News on 8/08/2018 04:13:00 PM Rating: 5