ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போதைய நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளில் பாதுகாப்பின் கீழ் ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எவ்வாறாயினும் , அவரை பார்வையிட வருவோரை கட்டுப்படுத்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் , ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக நாளைய தினம் சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனை பொதுபல சேனா அமைப்பின் பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் செலுத்தவுள்ளனர்.

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் Reviewed by Vanni Express News on 8/09/2018 11:54:00 PM Rating: 5