மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெரும் ரயில்வே சாரதிகள்

ரயில் சாரதிகள் கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபயசிங்க கூறியுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். 

ரயில் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார். 

ரயில்வே சாரதிகள் கூடுதலான சம்பளத்தை பெறும் நிலையில் மேலும் சம்பள அதிகரிப்புக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.

மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெரும் ரயில்வே சாரதிகள் மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெரும் ரயில்வே சாரதிகள் Reviewed by Vanni Express News on 8/09/2018 11:32:00 PM Rating: 5