பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்வு காண வருமாறு பிரதியமைச்சர் ரயில்வே ஊழியர்களிடம் கோரிக்கை

வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருமாறு போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரயில்வே ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தாமல் விரைவில் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்ளுமாறு பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்ஹ கேட்டுக் கொண்டார்.

சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும், கொழும்பு கோட்டையில் இருந்து நாட்டின் பல பாகங்களுக்கு அலுவலக ரயில் சேவைகளை நடத்த முடிந்ததாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கண்டி, ரம்புக்கணை, காலி, மாத்தறை, அவிசாவளை, மஹவ, சிலாபம் நோக்கி ரயில் வண்டிகள் பயணித்திருப்பதாக அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்வு காண வருமாறு பிரதியமைச்சர் ரயில்வே ஊழியர்களிடம் கோரிக்கை பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்வு காண வருமாறு பிரதியமைச்சர் ரயில்வே ஊழியர்களிடம் கோரிக்கை Reviewed by Vanni Express News on 8/10/2018 05:56:00 PM Rating: 5