ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும்

கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எவ்விதத்திலேனும் குற்றம் சாட்ட முடியுமா என்பது தொடர்பில் பேராசிரியர் மெக்‌ஸ்வெல் பரணகம உடன் அமெரிக்க தூதரக குழு கலந்துரையாடியது உண்மை எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அது மட்டுமல்லாமல் அரச சார்பற்ற குழு ஒன்று அமெரிக்க தூதரகத்திற்கு சென்று கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அனைத்து தரப்பினரும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அச்சம் கொள்கின்றனர் என்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் Reviewed by Vanni Express News on 8/06/2018 04:50:00 PM Rating: 5