முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்திய UNP பிரதேச சபை தலைவர் - வீடியோ

தெரனியகல பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை தலைவர்  முஸ்லிம் வர்த்தகர்  ஒருவரை அச்சுறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைகளில் வேகமாக பரவும் நிலையில்,

இது தொடர்பில் மேலதிகமாக தெரியவருவதாவது,

திஹாரிய பிரதேசர்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் தேங்காய் என்ணெய் விற்பனை நிலையம் ஒன்றை திறக்க பெரும்பான்மை நபர் ஒருவரின் (தெரனியகல பிரதேச சபை சொந்தமான) கடை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ள அதேவேளை குறித்த கடைக்கு பிட்டிங்கஸ் பொருத்தும் பணியை ஆரம்பித்துள்ளார்.

அதே பகுதியில் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரம் தேங்காய்  எண்ணெய் கடை வைத்துள்ள நிலையில் தெரனியகல பிரதேச சபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் குறித்த கடைக்கு சென்று முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவ வீடியோ சமூக வலைகளில் வைரலாக பரவிவரும் அதேவேளை இது தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்துங்கள்  - தகவல் உதவி ; லியாவுத்தீன் - மாவனல்லை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்
முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்திய UNP பிரதேச சபை தலைவர் - வீடியோ முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்திய UNP பிரதேச சபை தலைவர் - வீடியோ Reviewed by Vanni Express News on 8/05/2018 04:13:00 PM Rating: 5