மழையுடனான வானிலை - கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

நாட்டில், குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் இன்றிலிருந்து குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. 

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, அடுத்த சில நாட்களுக்கு நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில், குறிப்பாக நாட்டுக்கு வடமேற்காகவும் தென்கிழக்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடியதான சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 
மழையுடனான வானிலை - கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் மழையுடனான வானிலை - கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் Reviewed by Vanni Express News on 8/12/2018 03:28:00 PM Rating: 5