அமோனியா வாயு அடங்கிய சிலிண்டர் வெடித்ததால் ஐவர் வைத்தியசாலையில்

ஹொரணை, இங்கிரிய பிரதேசத்தில் இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு வௌியெற்றம் காரணமாக 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை தொழிற்சாலைக்கு அமோனியா வாயு அடங்கிய சிலிண்டரை ஏற்றி வந்த லொறியில் இருந்து சிலிண்டரை இறக்கும் போது ஒரு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமோனியா வாயு அடங்கிய சிலிண்டர் வெடித்ததால் ஐவர் வைத்தியசாலையில் அமோனியா வாயு அடங்கிய சிலிண்டர் வெடித்ததால் ஐவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 9/14/2018 04:25:00 PM Rating: 5