ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி

செக் குடியரசுவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பில்சன் நகரில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி Reviewed by Vanni Express News on 9/06/2018 04:27:00 PM Rating: 5