நஞ்சருந்திய பெண்ணை காப்பாற்ற சென்ற வேன் மோதி சிறுமி பலி

மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியின் மாரகொல்லிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் தாயும் தந்தையும் காயங்களுக்குள்ளாகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று (10) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

தங்காலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பாதையின் வலது பக்கத்தில் உள்ள தெரு ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நஞ்சருந்திய பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு வேகமாக வந்த வேனை ஓட்டுனருக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நஞ்சருந்திய பெண்ணின் கணவரே குறித்த வேனினை செலுத்தி வந்துள்ளதுடன் அவர் தங்காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நஞ்சருந்திய பெண்ணை காப்பாற்ற சென்ற வேன் மோதி சிறுமி பலி நஞ்சருந்திய பெண்ணை காப்பாற்ற சென்ற வேன் மோதி சிறுமி பலி Reviewed by Vanni Express News on 9/11/2018 04:33:00 PM Rating: 5