நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய முச்சக்கர வண்டி - ஒருவர் பலி

வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் யாலபேவ பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். 

நிறுத்த வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்னால் வெல்லவாயவில் இருந்து தனமல்வில நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதுடன் அவருடைய மனைவி பலத்த காயங்களுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சடவம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த விற்பனை நிலையமொன்றின் சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளதுடன் விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய முச்சக்கர வண்டி - ஒருவர் பலி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய முச்சக்கர வண்டி - ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 9/12/2018 04:13:00 PM Rating: 5