லொறி சில்லில் சிக்குண்டு ஒருவர் பலி

-க.கிஷாந்தன்

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை கெரோலினா பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த தர்மலிங்கம் முரளிதரன் வயது 47 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி உரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த  உதவியாளர்; லொறியிலிருந்து வீழ்ந்து பின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

குறித்த விபத்து தொடர்பாக சாரதி வட்டவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறியையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறி சில்லில் சிக்குண்டு ஒருவர் பலி லொறி சில்லில் சிக்குண்டு ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 9/13/2018 03:44:00 PM Rating: 5