சிலாபம் - கொழும்பு பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் பலி

சிலாபம் - கொழும்பு ஹால்பன்வில பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (18) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

மாரவில, ஹால்பன்வில பகுதியை சேர்ந்த மாக்ரட் தமெல் என்ற 72 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தபால் நிலையத்திற்கு செல்வதற்காக குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஓட்டுனர் மாரவில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலாபம் - கொழும்பு பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் பலி சிலாபம் - கொழும்பு பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 9/18/2018 11:09:00 PM Rating: 5