ஹட்டன் விபத்தில் இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம்

-க.கிஷாந்தன்

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.

விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைகளுக்கான டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலவாகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும்,  ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் விபத்தில் இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம் ஹட்டன் விபத்தில் இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம் Reviewed by Vanni Express News on 9/16/2018 11:21:00 PM Rating: 5