லொறி மோதி ஒருவர் பலி

பொலன்னறுவை, வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடவத்மடுவ சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு 08.55 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு ​நோக்கி மீன் ஏற்றி வந்த லொறி ஒன்று பாதையின் குறுக்காக சென்ற நபர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த நபர் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

மகிந்தாகம, அசேலபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

விபத்துக்கு காரணமாக லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லொறி மோதி ஒருவர் பலி லொறி மோதி ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 9/15/2018 11:06:00 PM Rating: 5