வவுனியா - கூமாங்குளம் சதொச சந்தியில் விபத்து - இருவர் படுகாயம்

வவுனியா - கூமாங்குளம், சதொச சந்தியில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கூமாங்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் மீது வவுனியா நகரிலிருந்து கூமாங்குளம் நோக்கி மதுபான போத்தல்களை ஏற்றிக்கொண்டு சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்திற்கு இலக்காகிய இரு மோட்டார்சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா - கூமாங்குளம் சதொச சந்தியில் விபத்து - இருவர் படுகாயம் வவுனியா - கூமாங்குளம் சதொச சந்தியில் விபத்து - இருவர் படுகாயம் Reviewed by Vanni Express News on 9/09/2018 03:36:00 PM Rating: 5