முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு தீர்மானம் - ஶ்ரீ லங்கன் விமான சேவை

தமது நிறுவனத்திற்கான முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு தீர்மானம் எடுத்திருப்பதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது. 

கடந்த வாரம் நேபாளில் இருந்து இந்தியா ஊடாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கை வந்த போது தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பை நாய் கூட உண்ண மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். 

ஜனாதிபதியின் இந்த விமர்சனத்தையடுத்து ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸுக்கு கூறினார். 

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு இதுவரை காலமும் டுபாய் நிறுவனம் ஒன்றே முந்திரி பருப்பு வழங்கி வந்துள்ளது.
முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு தீர்மானம் - ஶ்ரீ லங்கன் விமான சேவை முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு தீர்மானம் - ஶ்ரீ லங்கன் விமான சேவை Reviewed by Vanni Express News on 9/12/2018 11:17:00 PM Rating: 5