பிரபல வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை திருடிய பெண் கைது

இமதுவ நகரில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பெண் குறித்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடுவது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.

அதனை தொடர்ந்து, குறித்த பெண் தொடர்பில் வர்த்தக நிலையத்தின் ஊழியர்கள் அவதானத்துடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வர்த்தக நிலையம் வந்த குறித்த பெண் மீண்டும் திருட முற்பட்டுள்ளார்.

இதன் போது , அங்கிருந்த ஊழியர்களால் பிடிக்கப்பட்ட பெண் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இமதுவ காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
பிரபல வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை திருடிய பெண் கைது பிரபல வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை திருடிய பெண் கைது Reviewed by Vanni Express News on 9/27/2018 11:40:00 PM Rating: 5