இரண்டு கோடி எட்டு இலட்சம் பெறுமதியடைய தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை தங்க பிஸ்கட்பளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சுமார் இரண்டு கோடி எட்டு இலட்சம் (2,08,00,000) ரூபா பெறுமதியடைய தங்க பிஸ்கட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 

37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று காலை 08.30 மணியளவில் இந்தியாவில் இருந்து அவர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. 

சந்தேகநபர் தனது உள்ளாடை மற்றும் பாதணிகளில் மறைத்து சுமார் 03 கிலோவும் 200 கிராம் நிறையுடைய 31 தங்க பிஸ்கட்களை கடத்திய வந்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கோடி எட்டு இலட்சம் பெறுமதியடைய தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது இரண்டு கோடி எட்டு இலட்சம் பெறுமதியடைய தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 9/08/2018 05:52:00 PM Rating: 5