புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விமான நிலையத்தில் கைது

புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அஞ்சன சந்தருவான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித கொலையுடன் தொடர்புடைய வழக்கொன்றில் அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் அவர் வெளிநாடு செல்லும் பொருட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விமான நிலையத்தில் கைது புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விமான நிலையத்தில் கைது Reviewed by Vanni Express News on 9/10/2018 05:32:00 PM Rating: 5