மீண்டும் சூடுபிடிக்கும் இறக்காமம் மாயகல்லி விவகாரம்

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) விரிவுரையாளர்-சலபி அரபுக்கல்லூரி.

கடந்த 2016.10.29ம் திகதியன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு அம்பாறை வித்தியானந்த பிரிவனாதிபதி கிரிந்திவெல சோமரத்ன தேரர், வித்தியானந்த பிரிவான மஹிந்த ஹிமி தேரர் மற்றும் கல்முனை சூரண்முத்துகல சங்கரத்ன தேரர்களின் தலைமையில் இறக்காமம் 7 ம் பிரிவான மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் இறக்காமப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நாமறிந்தவையே. 

அது மாத்திரமல்லாமல், இவர்களின் பின்னணியில் இருப்போர்கள் இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்களை எதிர்த்து கோஷமிடும் இனவாதக்கும்பல் என்பதும் நாமறிந்தவையே...

இன்று இலங்கையில் இனவாதச்சூழல் சற்று தனிந்து காணப்பட்ட போதும், இலங்கையின் கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் இறக்காமப் பிரதேச செயலகத்திற்கு இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் பெளத்த விகாரை அமைப்பதற்காக 1 ஏக்கர் காணியை பிரதேச செயலகத்தால் வழங்குமாறு புதிதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கடிதம் இறக்காமப் பிரதேசத்தில் பெரும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக அரசுக்கு மறுப்புக்கடிதம் சட்டத்தரணி பாறுக் மற்றும் சமீம் ஆகியோரினால் அனுப்பப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பில் தேசிய, பிரதேச முஸ்லிம் தலைமைகள் அவதானஞ்செலுத்த வேண்டும்.

குறிப்பாக. இந்த விவகாரம் தொடர்பாக கூடிய அக்கரை செலுத்தும் சட்டத்தரணி பாறுக் மற்றும் சகோதரர் சமீம் ஆகியோருக்கு எமது இறக்காமப்பிரதேசம் சார்பாக வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும்.
மீண்டும் சூடுபிடிக்கும் இறக்காமம் மாயகல்லி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் இறக்காமம் மாயகல்லி விவகாரம் Reviewed by Vanni Express News on 9/06/2018 04:53:00 PM Rating: 5