haiiii

முஸ்லம்களின் தலைவர் ஹக்கீம் அவர்கள் , முஸ்லிம்களுக்கு சார்பாக இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கை என்ன தெரியுமா...?

-எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை

சபாநாயகர் தலைமையில் இந்திய பிரதமரை சந்திக்கச் சென்ற தூதுக்குழுவில் சென்றவர்கள் வைத்த கோரிக்கைகள்..!

சம்பந்தன் ஐயா...!

பதிய அரசியல்யாப்பை உருவாக்கி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர இந்தியா ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்படி வழங்கத் தவறினால் எங்களைவிட தீவிரமான போக்கைக் கொண்ட தலைமைகள் உருவாகலாம் என்று கூறியிருந்தார்.

டக்களஸ் தேவானந்தா.... !

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மனோ கணேசன்.... !

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக இன்று இந்த இடத்தில் சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும் பல கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளுடன் நானும் உடன் படுகின்றேன்.

ரஹுப் ஹக்கீம்.... !

கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை கிழக்கு கரையோரமாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். அதேபோல் வடக்குக்குச் செல்லும் மன்னார், தலைமன்னார் வரையுள்ள ரயில் பாதைகளையும் புதுப்பித்து தரவேண்டும்.

இதில் கவணிக்கப்படவேண்டியது என்னவென்றால் நமது சாணக்கிய தலைவர் ஹக்கீம் அவர்கள் இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று முக்கியத்துவமான கோரிக்கைதான். மற்ற இன தலைவர்கள் வைத்த கோரிக்கைகள் தங்களது சமூகம் சார்ந்தது. அதே நேரம் நமது தலைவர் ஹக்கீம் அவர்கள் வைத்த கோரிக்கையானது சமூகம் சார்ந்ததா என்று பார்த்தால் இல்லை என்றே கூறவேண்டும்.

இவர் உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தின் தலைவராக இருந்திருந்தால் வடக்கு கிழக்கிலே முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் சிலதை குறிப்பிட்டு அதற்கான தீர்வை பெற்றுத்தர உதவி செய்யுமாறு இந்தியாவை கேட்டிருக்கலாம். குறிப்பாக யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், முஸ்லிம்களின் காணிகள் மீட்கப்படாமல் உள்ளது அதனை மீட்டுத்தர உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை அமைத்து தாறுங்கள் என்று கேட்டிருக்கலாம். இதனைப்பற்றியெல்லாம் குறிப்பிடாமல் ரயில் பாதை அமைத்து தாருங்கள் என்று கேட்டது சாணக்கியம் என்று கூற முடியுமா?

இதையும் வழமைபோன்று... இதுவெல்லாம் நடக்கவா போகிறது. நடக்கின்ற விடயம் என்றால்தானே நாமும் கோரிக்கை வைக்கமுடியும் என்று சொன்னாலும் சொல்லுவார்.

ஆகவே முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தை மூளைக்கு எடுத்து சிந்திக்கவேண்டும். தமிழர்கள் அவர்களுடைய விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது. நமது தலைவர்கள் இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தப்பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு ரயில் பாதைகள் இல்லாததுதான் பிரச்சினை என்று கூறியுள்ளார்.

இப்படியானவர்களினால்தான் முஸ்லிம்களுடைய பிரச்சினை சர்வமயப்படுத்தப்படாமல் உள்ளது என்பதோடு, இந்திய அரசாங்கம் உதவி செய்கிறதோ இல்லையோ நமது சமூகத்துக்கு இருக்கும் பிரச்சினைகளையாவது எடுத்துக் கூறியிருக்கலாம் அல்லவா? இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுத்தரும் தலைவர்களா.? இறைவன்தான் முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற வேண்டும்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4808,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11038,கட்டுரைகள்,1388,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3202,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2074,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: முஸ்லம்களின் தலைவர் ஹக்கீம் அவர்கள் , முஸ்லிம்களுக்கு சார்பாக இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கை என்ன தெரியுமா...?
முஸ்லம்களின் தலைவர் ஹக்கீம் அவர்கள் , முஸ்லிம்களுக்கு சார்பாக இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கை என்ன தெரியுமா...?
https://1.bp.blogspot.com/-AX2w1hPCb9Y/W5tQzFPww-I/AAAAAAABPGM/v08HvcCiwn0pjztgPS-JTE6_X3kN55iQgCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-AX2w1hPCb9Y/W5tQzFPww-I/AAAAAAABPGM/v08HvcCiwn0pjztgPS-JTE6_X3kN55iQgCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/09/article_14.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/09/article_14.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy