தமிழ் தந்தி பத்திரிகையை முஸ்லிம்கள் நிராகரிக்கவேண்டும்..!

-முனைமருதவன்

முஸ்லிம்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும் அதில் உண்மைத்தண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்காமல், முஸ்லிம்களை தாக்குவதற்கு ஏதோவொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவன் போல், இந்தச் செய்தியின் உண்மைத்தண்மையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் கொடூரமான முறையில் தலையங்கம் தீட்டி இனவாதத்தை தூண்ட முயற்சி செய்துள்ளார்கள்.

இதனைப் போன்று கடந்த காலங்களில் சில பத்திரிகைகள் சில விடயங்களில் தவறாக செயல்பட்டபோது நாம் அதற்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்தோம். அதன் பிறகு குறிப்பிட்ட பத்திரிகை தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதையும் நாம் அறிவோம்.

அதே போன்று இந்த பத்திரிகைக்கு எதிராகவும் உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்..

இதனை சிறிய விடயம் என்று விட்டுவிடாதீர்கள். இந்த விடயம் பொய்யானது என்பது இன்று நிரூபணமாகிவிட்டது. இதனை எல்லாத் தமிழ் சகோதரர்களுக்கும் எத்திவைக்கப்படவேண்டும். இதனை நமது அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் பேசி இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.

அப்போதுதான் அப்பாவி தமிழ் மக்கள் முஸ்லிம்களைப் பற்றிய தவறான செய்திகளை உடனே நம்பமாட்டார்கள்.

*இதனை அதிகம் அதிகம் செயார் செய்யுங்கள்...மற்றவர்களுக்கும் இந்த செய்தி கிடைக்கட்டும்..!
தமிழ் தந்தி பத்திரிகையை முஸ்லிம்கள் நிராகரிக்கவேண்டும்..! தமிழ் தந்தி பத்திரிகையை முஸ்லிம்கள் நிராகரிக்கவேண்டும்..! Reviewed by Vanni Express News on 9/12/2018 03:01:00 PM Rating: 5