பி.அ. ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளை 100% ஏற்றுக்கொள்கின்றேன்..!

-எம்.எச்.எம். இப்றாஹிம் கல்முனை

நேற்று நடந்த வெளிச்சம் நிகழ்ச்சியில் நான் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தேன். கல்முனை தமிழ் பிரிவு செயலகம் தரம் உயர்த்தல் சம்பந்தமாக ரகசியமான முறையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தப் பத்திரம் கெபினட் அமைச்சர் என்ற வகையில் ஹக்கீம் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தும் அதனை ஏன் அவர் கவணிக்கவில்லை என்று கேட்டிருந்தேன். கல்முனை மக்கள் மு.காங்கிரசின் தலைவரை கல்முனையின் காவலன் என்ற நினைப்பில் நினைத்துக் கொண்டிருப்பதனால் அதனை அவர் ஏன் கவணிக்கவில்லையென்றும் கேட்டிருந்தேன்.

அதற்கு பி.அமைச்சர் ஹரீஸ் அவர்கள் பதிலளிக்கும் போது...இந்தத்தவறை கல்முனையில் பல மாநகரசபை உறுப்பினர்களைப் பெற்றுள்ள கெபினட் அமைச்சர் ரிசாட் பதீயுதீனும்தான் செய்துள்ளார். அதனை ஏன் நீங்கள் கேட்கவில்லை என்று என்மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள். அந்த இடத்தில் அமைச்சர் ரிசாட் அவர்களோ அல்லது அவர்சார்ந்த உறுப்பினர்களோ இல்லாததனால் அந்தக்குற்றச்சாட்டை அவர்களின் மேல் வைக்க முடியவில்லை, இருந்தாலும் அவர்கள் கலந்து கொள்ளும் பகிரங்க நிகழ்ச்சிகள் வரும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக அந்தக் கேள்வியை முன்வைப்பேன்.

இருந்தாலும்... முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் கெபினட் அமைச்சர்களான ஹக்கீம், ரிசாட் போன்றோர் இந்த விடயத்தை கவணிக்காது விட்ட விடயமானது தவறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தலைவர்கள் எதிர்காலத்தில் கல்முனை மக்களின் காவலன் நாங்களே என்று கூறமுடியுமா? அதற்கான தர்மீக உரிமை அவர்களிடம் உள்ளதா என்று அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

கல்முனை என்பது மிகமுக்கியமான முஸ்லிம்களின் நகரமாகும். இந்த நகரததுக்கு ஏதாவது பிரச்சினைகள் வருமாக இருந்தால் அது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையே பாதிக்கும். அதனால்தான் எம்.எஸ் காரியப்பர், எம்.சி.அகமட், ஏ.ஆர்.எம் மன்சூர், தலைவர் அஸ்ரப் போன்றோர் இந்த நகரத்தின் மீது கூடிய கரிசனை காட்டிருந்தார்கள். அந்த வகையில் ஹரீஸ் எம்பியவர்கள் இந்த விடயத்தில் கூடிய கரிசனை காட்டியிருந்தாலும், கல்முனைக்கெண்டு பிரச்சினைகள் வரும்போது நேரடியாக அரச தலைவர்களை சந்திக்க முடியாமல் மூன்றாந்தரப்பின் ஊடாக சந்தித்து காரியத்தை சாதிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த மூன்றாம் தரப்புக்கள் இந்த விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது இவர்களின் நடவடிக்கையே காட்டிக்கொடுக்கின்றது எனலாம்.

இந்த நிலையில்தான் நாங்கள் கூறுகின்றோம். கல்முனையின் காவலனாக இருப்பவர் அரசாங்கத்தோடு நேரடியாக பேசக்கூடிய, சுதந்திரமாக இயங்கக்கூடிய கெபினட் அந்தஷ்த்துள்ள அமைச்சராக இருக்கவேண்டும் என்பதே. அது ஹரீஸ் அவர்களாகவும் இருக்கலாம். அப்படியென்றால்தான் கல்முனை மாநகரம் பாதுகாக்கப்படும் என்பதே எங்களின் உறுதியான வேண்டுகோளாகும். இதனை கல்முனை வாழ் முஸ்லிம் வாக்காளப் பெருமக்கள் நினைத்தால்தான் உண்டு என்பதும் உண்மையே...

ஆகவே கல்முனை மக்கள் சிந்திப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்....!

குறிப்பு- பி.அ.ஹரீஸ் அவர்களின் கூற்றின் படி....அமைச்சர் ஹக்கீம் அவர்களையும் அமைச்சர் ரிசாட் அவர்களையும் இந்த விடயத்தில் குற்றம் சாட்டுகின்றேன்..எதிர்காலத்தில் இதற்கான கேள்வியை அவர்களிடமும் கேட்பேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்...
பி.அ. ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளை 100% ஏற்றுக்கொள்கின்றேன்..! பி.அ. ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளை 100% ஏற்றுக்கொள்கின்றேன்..! Reviewed by Vanni Express News on 9/08/2018 05:36:00 PM Rating: 5