பல்கலைக்கத்திலிருந்து வில்பத்து ஊடாக ஓர் பயணம்

இன்றைய காலகட்டத்தில் சூழலுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இங்கையை பொருத்தவரையில் வில்பத்து தேசிய சரணாலயம் பற்றிய பிரச்சினை பெரும் சர்ச்சைக்குரிதாக தோற்றமளிக்கிது.

இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற திட்டங்களின் பின்னரே இப்பிச்சினைகள் வலுத்துள்ள நிலையை எம்மால் காணமுடிகிறது. இவற்றை நாட்டு மக்கள் முன்னிலையில் பெரும் பூதாகர உருவெடுக்கவைத்த பெருமை ஊடகங்களையேசாரும். இருப்பினும் இவற்றுக்கு தீர்வு என்னவோ எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

இச்செற்பாடுகளால் மக்கள் மட்டுமன்றி பல அரியவகை தாவரங்களும் பாதிப்புக்குள்ளாவதை தெளிவாகவே அவதானிக்க முடிகிறது.

இது பற்றி சுற்றுச்சூழல் அதிகாரியின் கருத்தாவது' 

வில்பத்து தேசிய சரணாலய பிதேசமானது மறிச்சுக்கட்டி மற்றும் மாவிலாறு பகுதிகளுக்கு இடையில் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய கிராமங்கள் மறிச்சுக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் வரையே அமையப்பெற்றிருந்தன. 

விவசாயம் மற்றும்  மீன் பிடி அவர்களது ஜீவனோபாயமாக இருந்தது. ஆனால் தற்போதைய புதிய குடியேற்றங்கள் சரணாலய எல்லைகளுக்கு உட்பட்டதாகவும் அமையப்பெற்றுள்ளன. அதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கிய குடியேற்ற வாசிகளில் 60மூ ஆனோர் இடம்பெர்ந்து சென்றுள்ளனர்'

இவ்வாறிருக்க இது பற்றி அங்குவசிக்கும் குடிமக்களின் கருத்தாக அமைவது

'வில்பத்து சரணாலய காணி என்று கூறி அவர்கள் எங்கள் பூர்வீககாணிகளை கைப்பற்றியுள்ளனர். எங்கள் விவசாயகாணிகள் தற்போது எங்களிடம் இல்லை. மேலும் முன்னையகாலம் இருந்த சரணாலய எல்லைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. எங்களிடம் காணிகளுக்கான யுபுயு அனு மதிபத்திரம் இருக்கிறது. 

இருப்பினும் எங்களால் அங்கு செல்ல முடியாது. கைப்பற்றிய இடங்களுக்கான மாற்றிடங்களும் தரப்படவில்லை. அவர்கள்தான் எங்களது இடங்களை பிடித்து எல்லை கற்களை நட்டிருக்கிறார்களே ஒழிய நாங்கள் வில்பத்து காணிகளுக்கு செல்லவும் இல்லை. மரங்களை வெட்டவுமில்லை'.

மேலும்இதுபற்றிமுன்னர்மீள்குடியேற்றத்திற்குபொறுப்பாயிருந்தகௌரவஅமைச்சர்றிஷாட்பதியுதீன்தெரிவித்தகருத்தாவது

'அந்த மக்கள் அந்த நிலங்களின் உரிமையாளர்கள். 2012 ஆம் ஆண்டில் புத்தளம் அகதி முகாம்களில் அம்மக்கள் இருந்தனர். அந்த கால கட்டத்தில் கடமையில் இருந்த அமைச்சரவையால் அவர்களது நிலங்கள் ஒரு இரவில் இரகசிய இரகசியமாக வனசரணாலயங்கள் என்று வர்த்தமானி அறிவிப்புகள் விடுக்கப்பட்டன.

அந்த நிலங்களை வனசரணாலயம் என்று மூன்று பகுதிகளாகக்கொண்டாடுகிறார்கள். இந்த வழக்கில் எந்த தமிழ் கட்சிகளும் அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளும் மீள்குடியேற்றதிட்டத்திற்கு எதிராக இல்லை. தென்மாகாணத்தில் உள்ள சுற்றுச்சூழல்வல்லு நர்களாலும் இ சில ஊடகவியலாளர்களாலும் சில இனக்குழுக்களாலும் மட்டுமே எதிர்த்துவப்படுகிறது. போலித்தனமான பிரச்சினைகளை உருவாக்கி அவர்கள் இந்த பிரச்சனையால் சில பிரச்சாரங்களை செய்கிறார்கள்'.

எது எவ்வாறிருப்பினும் கடைசியாக இந்த சம்பவங்கள் மூலம் பலிகடாவாகமாறி இருப்பது இயற்கைகாடு. இயற்கை நேசர்கள் ஏதாவதொருவகையில் சுற்றுச்சூழல் அழிவுடன் ஒத்துப்போவதில்லை. ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான அழிவுகள் ஏற்படாமல் பாதுகாத்து இயற்கை வனப்பகுதியை நமது சொந்த உயிர்களாக உணர வேண்டும்.

பல்கலைக்கத்திலிருந்து வில்பத்து ஊடாக ஓர் பயணம் பல்கலைக்கத்திலிருந்து வில்பத்து ஊடாக ஓர் பயணம் Reviewed by Vanni Express News on 9/06/2018 10:59:00 PM Rating: 5