மாணிக்கக் கல் வியாபாரமும் முஸ்லிம்களின் ஆளுமைகளும்.

-கிண்ணியா. ஐனுதீன், சவூதியிலிருந்து.

எமது நாட்டில் முஸ்லிம்களின் வியாரங்களையும் இருப்பையும் இல்லாது செய்வதுக்காக பேரினவாதமும், தமிழ் தேசிய இனவாதமும் நங்கு திட்டம் தீட்டி அரங்கேற்றும் செயல்களினால். இந்த நாட்டுக்கு மிகப் பெரிய வருமானங்களை ஈட்டித் தரும் மாணிக்கக் கல் வியாபாரம் எமது முஸ்லிம்களின் கை நழுவிச் சென்று விட்டது. அடுத்த கட்ட நகர்வாக முஸ்லிம்களை புடவை வியாபாரத்திலிருந்து ஓரங்கட்ட சதிகள் அரங்கேறுவதை அண்மைக் காலமாக நோ லிமிட், பெசன் பார்க் போன்ற கடைகளை தீ இட்டு எரிப்பதும், முஸ்லிம்களின் கடைகளில் துணி மணிகள் வாங்கக் கூடாது என்ற சதிகார பிரச்சாரங்களினாலும் காணக் கூடியதாக உள்ளது.

கல் வியாபாரத்தில் முஸ்லிம்கள் அன்று பிரசித்தி  அடைந்ததுக்கு பல காரணங்கள் உண்டு. உ+மாக இன்றைய அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல் , அன்று அரபு நாடுகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்தினாா்கள். பக்தாத் ராஜ்ஜியம் உலகில் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்திய நாடு. அரபிய மன்னர்கள் தங்களது வீர வால் முனைகளிலும் தலைக் கேடயங்கள் சிம்மாசனங்களிலும் இரத்தினங்களை பதிப்பதில் ஆர்வம் கொண்டு இருந்தாா்கள். அவர்களிடம் இலங்கை இரத்தினக் கல்களுக்கு தனி மதிப்பிருந்தது அதனால் அரபியர்கள் நமது நாட்டுக்கு மாணிக்கத்தீவு என்று பெயர் சூட்டினாா்கள்.

இந்த அடிப்படையில் அல் குர் ஆன் வழி வந்த முஸ்லிம்கள் அரபு மொழி திறனுடன் அறிவாற்றலும் கொண்டிருந்து பன்மொழிப் புலமையும்  பெற்றிருந்தாா்கள்  அன்றைய முஸ்லிம்கள் . இதனால் உலகளவு ரீதியில் தங்களது மொழி வளத்தை கொண்டு இந்த வியாபாரத்தில் முன்னேரினாா்கள் அதே நேரம் அன்று இன்று போல் சிங்கள மொழி உலகரீதியாகப் பேசப்படவில்லை. அது இலங்கையில் மட்டும் முடங்கியதால் சிங்கள மக்கள் கல் வியாபாரத்தில் ஈடு பட விரும்பவும் இல்லை  என்பதால் கல் அகழ்வு நிலங்களும் வியாபாரமும் நமது முஸ்லிம்களின் கைவசம் இருந்தது

ஸ்ரீரிமா அம்மையாரின் ஆட்சியில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியொன்று  1974ம் ஆண்டு எமது  நாட்டில் ஏற்ப்பட்டது .அப்ப அரிசிக்கும் மண் எண்ணெய்க்கும், பாணுக்கும் போடினில் நின்ற காலம் , அந்த நேரம் மாணிக்கக் கல் வியாபாரி மர்ஹூம்  அல் ஹாஜ் நளீம் ஹாஜி அவர்கள் தேசிய நலனுக்காக தன் சொந்தப் பணத்தில் 15 இலட்ச்சம் ரொக்கப் பணத்தை  தானமாக வழங்கியது அன்றைய டைம் ஒப் சிலோன் என்ற பத்திரிகையில் ஆசிரியர் தலைப்பில் புகழ்ந்து எழுதும் அளவுக்கு முஸ்லிம்கள் கல் வியாபாரத்தில் முன்னேறி இருந்தாா்கள்.  இதனால் வந்த பொறாமை பேரினவாதிகளிடம் பெரியளவு வெறுப்பை உண்டு பண்ணியது.

மேலும் ,ஆரம்ப காலங்களில் ஜெம் வியாபாரம் 90%க்கு மேல் முஸ்லிம் மக்களின் கைகளில் இருந்தது. அதாவது, 1911ம் ஆண்டு காலப் பகுதியில் மாணிக்கக் கல் வியாபாரிகளின் எண்ணிக்கை வெறும் 979 பேர்கள் அதில்  முஸ்லிம்கள் 876 பேர்கள் இருந்தாா்கள். அதே வேளை கல் தோண்றும் வேலைகளில் கூலி ஆற்க்கள்  அதிகமானவர்  சிங்கள நண்பர்கள் அதிலும் முஸ்லிம்கள் குறைவு. இதை கண்டு சகித்துக் கொள்ள முடியாது பொறாமை கொண்ட அன்றைய சிங்களத் தலைவர்கள் பல திட்டங்களைத் தீட்டினார்கள்.

அதாவது, ஆங்கலயர்களின் ஆட்சி காலத்தில் கலாநீதி என், எம், பெரேரா  அவர்கள் மாணிக்கக் கல் வியாபாரத்தை அரச மயப்படுத்த வேண்டும் என்ற கோசத்தைக் கொண்டு வந்தாா். அது சரி வர இல்லை. பின்னர் அவர் 1972ல் ஸ்ரீரிமா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த போது அதே மசுதாவைத் திரும்பக் கொண்டு வந்தாா். அது மர்ஹூம் நளிம் ஹாஜியார் அவர்களின் ஆலோசனையின் படி நாட்டுக்கு ஒரு அண்ணியச் செலவானியை பெற்றுத் தரும் வியாபாரமாக மாற்றப்பட்டது.

பின்னாளில் வந்த ஐ, தே, கட்சியின் ஆட்சிக்காலத்தில் பேருவலயில் பாகீர் மரைக்கார் , இம்தீயாஸ் பாகீர் மரைக்கார், மர்ஹூங்களானே  கண்டியில் ஏ,சி,எம் கமீட்  அவர்கள், கொழும்பில் எம் எச் எம் முகமட் அவர்கள், கல்முனையில் ஏ, ஆர், எம் மன்சூர் அவர்கள், திருகோணமலையில் எம் ஈ எச் மஹ்ரூப் அவர்கள் அன்றைய அமைச்சரவையில்  ஆதிக்கம் செலுத்தியதினால் எமது முஸ்லிம்களின் கைகளிலிருந்து பறி போகாமல் பாதுகாத்தாா்கள். 

மீண்டும் சந்திரிக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில் திட்டம் போட்ட சதிகாரக் கும்பல்கள் கல் அகழும் நிலங்களை எமது கைகளில் இருந்து பறித்துக் கொண்டு வெறும் வியாபாரத்தை எமது அனுபவத்தைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்களிடம் விட்டார்கள். தொடர்ந்து வந்த சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் மஹிந்தா காலத்தில் மிகப் பெரிய துரோகத்தில் சிக்கினாா்கள் நமது கல் வியாபாரிகள். அதாவது கொழும்பை தளமாகக் கொண்டு வியாபாரம் செய்த முஸ்லிம்களிடம்  மஹிந்தா குழுவினர் பெரும் தொகை கப்பங்கள் கேட்டு தொல்லை கொடுத்தாா்கள். கப்பம் கொடுக்க மறுத்தவர்களை கள்ளக் கடத்தல் வியாபாரிகள் என் பொய் பட்டம் சூட்டினாா்கள். 

இதனால் மன உளைச்சல் கொண்ட எமது முஸ்லிம் மாணிக்கக் கல் வியாபாரிகள் ஐரோப்பியா நாடுகளுக்கு இடம் பெயர்ந்தாா்கள் அதனால் இன்று நிலமும் இல்லை நம் வசம் வியாபாரமும் இல்லை.  இதே போல் தற்போது எமது புடவை வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களின் கை வைத்துள்ளார்கள் இதிலிருந்து நாம் பாதுகாப்பு தேட வேண்டும் என்றால் ஒற்றுமையாக அரசியல் பலம் பெறவேண்டும் . இல்லாது போனால் எதிர் கால சந்ததிகள் மிகப் பெரியளவில் நெருகடியில் சிக்குவாா்கள்.
மாணிக்கக் கல் வியாபாரமும் முஸ்லிம்களின் ஆளுமைகளும். மாணிக்கக் கல் வியாபாரமும் முஸ்லிம்களின் ஆளுமைகளும். Reviewed by Vanni Express News on 9/27/2018 01:11:00 PM Rating: 5