அஸ்மினுக்கு எதிரான ஆர்ப்பாடம், யாழ் முஸ்லிம் மக்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றது

-தகவல் எம்.எல்.லாபிர் 

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் பேரவை, பள்ளிவாயல் நிர்வாகங்கள், சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை

`இஸ்லாம் அமைதியின் மார்க்கம், இஸ்லாம் முன்மாதரியின் மார்க்கம், ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் செயற்பாடுகளினால் அது அவமானங்களுக்கும் தலைக்குனிவிற்கும் உள்ளாகின்றது, அவ்வாறான ஒரு நிகழ்வாகவே இன்றையதினம் 07-09-2018 அன்று யாழ்ப்பாணம், மானிப்பாய்வீதி, பெரிய மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் முன்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நாம் நோக்குகின்றோம்.

வலம்புரி நாளிதழில் வெளியாகிய செய்தி தொடர்பாக அய்யூப் அஸ்மின் அவர்கள் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார், அந்த மறுப்பானது வலம்புரி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அத்தோடு இதுதொடர்பில் போதுமான விளக்கத்தினையும், அவர் முன்னெடுக்கும் சட்டரீதியான நகர்வுகள் குறித்தும் அவர் மக்களுக்குத் தெளிவினை வழங்கியிருந்தார். அவ்வாறு அவர் முன்வைக்காத ஒரு கருத்தை அடிப்படையாகவைத்து வலம்புரியின் ஊடக தர்மத்துக்கு மாறான நடவடிக்கையினை யாழ் முஸ்லிம்கள் ஏற்கெனவே கண்டித்திருந்தனர். இந்நிலையில்,

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களோடு கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வே இந்த ஆர்ப்பாட்டத்திற்கான முழுமையான பின்னணியாகும், 01-09-2018 அன்றையதினம் வலம்புரி நாளிதழ் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் தெரிவிக்காத ஒரு கருத்தை அவர் தெரிவித்ததாகக் கூறி வெளியிட்ட தவறான ஒரு செய்தியின் அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தினை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஷரபுல் அனாம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ்ப்பாணம் கிளையின் செயலாளர் சுனீஸ் சுவர்கஹான், கொழும்பு இரண்டாம் குறுக்குத்தெரு  ஜே.டி.எம். டெக்ஸ்டைல் உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களுடைய யாழ்ப்பாண இனணைப்பாளர் முஹம்மத் நஜாத், முன்னாள் அரசியல்வதியான முபீன் ஆகிய 5 பேரே சிறுவர்களையும் இணைத்துக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தி முடித்தனர். இது யாழ் முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமல்ல.

வழமையாக வெள்ளிக்கிழமை தினங்களின் ஜும்ஆ தொழுகைக்காக மக்கள் ஒன்றுகூடுவது வழமையாகும், பள்ளிவாயலில் இருந்து மக்கள் வெளியேவரும்போது அவர்கள் வரும் வழிகளில் இப்படியான போராட்டங்களைச் செய்கின்றபோது மக்கள் கூட்டமாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படும், இவ்வாறான ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாயல்களின் ஜும்ஆ தினங்கள் அல்லாத தினங்களில் இவ்வாறான போராட்டங்களை நடாத்தும்போது அவர்களின் உண்மையான மக்கள் பலம் வெளிப்படும், எனவே இன்று இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டமானது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் “ஹறாம்” (மார்க்கத்தில் தடுக்கப்பட்டது) என்று பத்வா வழங்கப்பட்ட ஒன்றாகும். 

எனவே இத்தகைய ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்கள் சார்பாகவும், பொது அமைப்புக்கள் சார்பாகவும் பள்ளிவாயல் நிர்வாகம் சார்பாகவும் நிராகரிப்பதோடு எமது கண்டனங்களையும் முன்னிறுத்துகின்றோம்.
அஸ்மினுக்கு எதிரான ஆர்ப்பாடம், யாழ் முஸ்லிம் மக்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றது அஸ்மினுக்கு எதிரான ஆர்ப்பாடம், யாழ் முஸ்லிம் மக்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றது Reviewed by Vanni Express News on 9/07/2018 11:28:00 PM Rating: 5