மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் இருந்து ஒரு தொகை துப்பாக்கி தோட்டாக்கள்

மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு பள்ளத்தில் இருந்து டி 56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 340 கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

இலங்கை இராணுவத்தின் அபிவிருத்தி அதிகாரிகள் குழுவுக்கு இந்த துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 

பின்னர் அந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

இவை தவிர தோட்டாக்களின் வெற்றுக் கோதுகள் 12 உம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் இருந்து ஒரு தொகை துப்பாக்கி தோட்டாக்கள் மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் இருந்து ஒரு தொகை துப்பாக்கி தோட்டாக்கள் Reviewed by Vanni Express News on 9/12/2018 11:32:00 PM Rating: 5