இனந்தெரியாத சடலம் ஒன்றின் பாகங்கள் சிலாபம் கடலில் கரையொதுங்கியது

இனந்தெரியாத சடலம் ஒன்றின் பாகங்கள் சில சிலாபம் கடற் பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று (07) இரவு இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. 

கடற் பிரதேசத்தில் இருந்த ஒருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த உடல் கரைந்து போயுள்ளதாகவும், தலை, வயிறு மற்றும் கால்கள் ஆகிய பாகங்கள் உள்ள போதிலும் கைகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இது யாருடைய சடலமாக இருக்கலாம் என்று இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இனந்தெரியாத சடலம் ஒன்றின் பாகங்கள் சிலாபம் கடலில் கரையொதுங்கியது இனந்தெரியாத சடலம் ஒன்றின் பாகங்கள் சிலாபம் கடலில் கரையொதுங்கியது Reviewed by Vanni Express News on 9/08/2018 04:59:00 PM Rating: 5