காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவாதி

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன. 

தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. 

இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. 

இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த வியாழனன்று ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிருக்கிறது. 

விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவிருக்கிறார்.
காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவாதி காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவாதி Reviewed by Vanni Express News on 9/08/2018 09:38:00 PM Rating: 5