கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு

காமெடி நடிகர் யோகிபாபு, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள யோகி பாபு, தற்போது வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோரைப் போல கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். 

டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்த இயக்குநர் இந்தக் கதாபாத்திரத்துக்கு யோகி பாபு பொருத்தமானவராக இருப்பார் என முடிவு செய்து அவரை அணுகியுள்ளார். 

கதை பிடித்துபோக அவர் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு தனியார் பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார். பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் அவரோடு ஒரு நாயும் நடிக்க உள்ளது.
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு Reviewed by Vanni Express News on 9/12/2018 04:22:00 PM Rating: 5