பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் - இந்த நிகழ்ச்சியை பார்த்து குழந்தைகளும் கெட்டு போகிறார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்காமல் யாரும் இருக்க முடியாது. இந்தியாவில் பல மொழிகளில் நடத்தப்படும் இந்த ரியாலிட்டி ஷோ அவ்வளவு பிரபலம். 

விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 12வது சீசன் விரைவில் துவங்கப்படவுள்ளது. அதையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஜோடிகளாக பங்கேற்கவுள்ளனர். 

இந்நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்ற போட்டியாளரான நடிகை சோபியா ஹயாத் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அதிரடியாக பல விஷயங்களை பேசியுள்ளார். 

"பிக்பாஸ் தடை செய்யவேண்டும். அதில் ஆண்கள் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்து குழந்தைகளும் கெட்டு போகிறார்கள். மக்கள் பொழுதுபோக்கிற்காக போட்டியாளர்களை சண்டை போடா வைக்கிறார்கள். வீட்டில் drug பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். எதுவும் முழுவதும் உண்மையில்லை. எடிட் செய்து மாற்றிவிடுகிறார்கள்" என அவர் கூறியுள்ளார். 

மேலும் அவர் சல்மான் கான் பற்றியும் மிக மோசமான கருத்து ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் - இந்த நிகழ்ச்சியை பார்த்து குழந்தைகளும் கெட்டு போகிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் - இந்த நிகழ்ச்சியை பார்த்து குழந்தைகளும் கெட்டு போகிறார்கள் Reviewed by Vanni Express News on 9/13/2018 12:23:00 AM Rating: 5