சர்கார் பேட்ட இரண்டு படங்களுமே செய்த சாதனை - செம டிரண்ட் தான்

தமிழ் சினிமாவின் இரண்டு பிரம்மாண்ட நடிகர்கள் ரஜினி-விஜய். இவர்கள் படங்கள் கொடுக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்து பாக்ஸ் ஆபிஸை திணற வைக்க சர்கார், பேட்ட என இரண்டு படங்களும் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறார்கள்.

அண்மையில் இவர்கள் ரஜினியின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படமான பேட்ட படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் பெயரையும் அறிவித்தனர்.

சன் பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டரில் சர்கார்-பேட்ட இரண்டு பட ஃபஸ்ட் லுக்கிற்கும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து விட்டனர். சமூக வலைதளங்களில் டிரண்ட் செட்டராக மாறியுள்ளது என டுவிட் செய்துள்ளனர்.
சர்கார் பேட்ட இரண்டு படங்களுமே செய்த சாதனை - செம டிரண்ட் தான் சர்கார் பேட்ட இரண்டு படங்களுமே செய்த சாதனை - செம டிரண்ட் தான் Reviewed by Vanni Express News on 9/08/2018 11:06:00 PM Rating: 5