அது எனக்கும் அனிருத்திற்குமே உள்ள ரகசியம் - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக தான் செல்வார்கள். அந்த வகையில் இந்த வாரம் இவர் நடிப்பில் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது, இதற்காக சிவகார்த்திகேயன் சில ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகின்றார்.

அப்போது ஒரு நிகழ்ச்சியில் சினிமாவிற்கு வந்த போது நான் அனிருத்திடம் நீங்க சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன்.

அவரும் நீங்கள் ரகுமான் சார் இசையில் நடிக்க வேண்டும் என்று கூறினார், தற்போது நாங்கள் இருவர் சொன்னதும் நடந்துவிட்டது.

இந்த ரகசியம் நீண்ட வருடங்களாக எங்களுக்குள்ளே இருந்தது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
அது எனக்கும் அனிருத்திற்குமே உள்ள ரகசியம் - சிவகார்த்திகேயன் ஓபன் டாக் அது எனக்கும் அனிருத்திற்குமே உள்ள ரகசியம் - சிவகார்த்திகேயன் ஓபன் டாக் Reviewed by Vanni Express News on 9/09/2018 10:43:00 PM Rating: 5